நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி?

Prabha Praneetha
4 years ago
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதி?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இதுவே சரியான தருணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை தாமதமானது என அவர் தெரிவித்தார்.

இந்த வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவித்த அவர், இருப்பினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் உறுதிப்படுத்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4