இலங்கையின் 10 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

Reha
4 years ago
இலங்கையின் 10 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்

கொவிட் தொற்று பரவியதன் பின்னர் இலங்கையின் சனத்தொகையில் சுமார் 60 வீதமானோர் சத்தான உணவை உட்கொள்ளவில்லை என உணவு உரிமைகள் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி,மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் கொவிட் பரவல் தொடங்கிய டிசம்பர் 2020 முதல் இந்த ஆண்டு ஜனவரி 30 வரையிலான காலகட்டத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் மலிவான உணவை உண்பதாகவும், 69 சதவீதம் பேர் வாரத்திற்கு ஐந்து வேளை உணவை உண்பதில்லை எனவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 14 சதவீதம் பேர் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் ஒரு வேளை உணவை சாப்பிடுவதில்லை என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4