கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை! - பேலியகொடையில் சடலம் மீட்பு

#Death
Prasu
4 years ago
கொடூரமாகத் தாக்கப்பட்டு ஆண் ஒருவர் படுகொலை! - பேலியகொடையில் சடலம் மீட்பு

ஆண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரின் சடலம் பேலியகொடை - வனவாசல வீதியில் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது எனக் களனிப் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி ரொஸான் டயஸ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

குறித்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்" - என்றார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4