ஒரு மில்லியன் யூரோ போலி நாணயத்தாளை ருபாவாக மாற்ற முயன்ற இருவர் கைது!

#Arrest
Prathees
4 years ago
ஒரு மில்லியன் யூரோ போலி நாணயத்தாளை ருபாவாக மாற்ற முயன்ற இருவர் கைது!

தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் மஹவெல  சந்திக்கு அருகில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், STFபுலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின்படி STF புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் தெமட்டகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட மேம்பாலத்திற்கு அருகாமையில் மஹவெல  சந்திக்கு அருகில் கடந்த 25 ஆம் திகதி திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது  ஒரு மில்லியன் யூரோ நாணயத்தாளை இலங்கை ருபாவாக மாற்றுவதற்கு முயற்சி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடம் மேலும் விசாரணை நடத்தியதில் ஐரோப்பிய நாடுகளில் பணமோசடி செய்பவர்கள் மூலம் பணம் பெறப்பட்டது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4