கடலோர ரயில் பாதையில் இருந்த ஆணிகளை கழற்றியது யார்? விசாரணைகள் ஆரம்பம்

#Arrest #Police
Prathees
4 years ago
கடலோர ரயில் பாதையில் இருந்த ஆணிகளை கழற்றியது யார்? விசாரணைகள் ஆரம்பம்

கரையோரப் புகையிரதப் பாதையின் கிங்தோட்டை பிரதேசத்தில் உள்ள புகையிரத பாதையில் அதிகளவான இரும்பு ஆணிகள் அகற்றப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு சேவை மற்றும் வீதிப் பிரிவின் அதிகாரிகள் காலி மற்றும் ரத்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் கிங்தோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பாலம் வரை 70 ஆணிகள் அகற்றப்பட்டதுடன், பாலத்தில் இருந்து ரத்கம நோக்கி 42 ஆணிகள் அகற்றப்பட்டுள்ளன.

அப்பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து பழைய உலோகங்கள் சேகரிக்கும் கடைகளையும் ஆய்வு செய்த போதிலும், அகற்றப்பட்ட ஆணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என ரயில்வே பாதுகாப்பு சேவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

இது நாசகார நடவடிக்கையல்ல எனவும் போதைப்பொருள் பாவனையாளர்களர் இந்த ஆணிகள் அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை காலி மற்றும் ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4