இராணுவ தளபதி ரஷ்யாவுக்கு விஜயம்

#Shavendra Silva
Prathees
4 years ago
இராணுவ தளபதி ரஷ்யாவுக்கு விஜயம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தற்போது ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு விஜயம் செய்துள்ளார்.

ரஷ்ய நடவடிக்கைப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது சஷ்ய குடியரசின் இராணுவத்தினரால் இலங்கை இராணுவத் தளபதி கௌரவிக்கப்பட்டார்.

அதன் பின்னர் கிரெம்ளினில் உள்ள அலெக்ஸாண்ட்ரோவ்ஸ்கி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள  ரஷ்ய ராணுவத்தில் உயிரிழந்த வீரர்களின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி இராணுவத் தளபதியால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, ​​இலங்கை ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான பயிற்சித் திட்டங்களை ஊக்குவித்தல், கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துதல் மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான இயந்திரவியல் மற்றும் பொறியியல் அறிவைப் பரிமாறிக்கொள்வது உட்பட  பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4