சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் – விவசாய அமைச்சர்

Prabha Praneetha
4 years ago
சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் – விவசாய அமைச்சர்

சீன சேதன உரக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோமென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பசளையின் மாதிரி மீளப் பரிசோதிக்கப்பட மாட்டாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் அதனைப் பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும்
அத்துடன் அதற்கான கட்டணமும் செலுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த சேதன உர மாதிரியை மீளாய்வு செய்யவோ, அதற்கான கொடுப்பனவை வழங்கவோப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4