குளவிக்கொட்டுக்கு உள்ளான 18 பேர் வைத்தியசாலையில்!

Reha
4 years ago
குளவிக்கொட்டுக்கு உள்ளான 18 பேர் வைத்தியசாலையில்!

புத்தளம், முந்தல் தேவாலய சந்திப் பகுதியில் இன்று காலை குளவிக் கொட்டுக்கு இலக்கான 18 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முந்தல் வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.மாலிங்கம இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

மரமொன்றில் குளவிகள் கூடுக்கட்டியிருந்த நிலையில் அப்பகுதியில் வீசிய கடும் காற்றுகாரணமாக குளவிகள் கலைந்து, சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கொட்டியுள்ளன என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4