குடிபோதையில் காரைச் செலுத்திய சாரதி: இருவர் பலி

#Accident #Police
Prathees
4 years ago
குடிபோதையில் காரைச் செலுத்திய சாரதி: இருவர் பலி

நுகேகொட ஹைலெவல் வீதியின் 7ஆம் தூணுக்கு அருகில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மஹரகமவிலிருந்து நுகேகொட நோக்கிப் பயணித்த கார் ஒன்று  நுகேகொடையிலிருந்து மஹரகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த கட்டுபெத்த மற்றும் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றவர் குடிபோதையில் இருந்ததாகவும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்இ சாரதியை நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4