இத்தாலியில் தனது இரண்டு மகள்களை கொலை செய்த இலங்கைத் தாய்

#Death
Prathees
4 years ago
இத்தாலியில் தனது இரண்டு மகள்களை கொலை செய்த இலங்கைத் தாய்

இத்தாலியின் வெரோனா நகரிலுள்ள வீடொன்றில் 11 வயது மற்றும் 3 வயது மகள்மாரைக் கொலை செய்யததாகக் கூறப்படும் தாய் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவர்கள் சபாடி, சந்தானி என்று அழைக்கப்படும் குறித்த சிறுமிகள்  வெரோனாவில் பிறந்தவர்கள்.

23ம் திகதி காலை  33 வயதான சச்சித்ரா நிசன்சலா பெர்னாண்டோ தேவ்த்ரா மஹவடுகே என்ற பெண்ணே தனது மகள்மாரைக் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தனது இரு மகள்களையும் கொலை செய்ததாகக் கூறப்படும் இலங்கைப் பெண் தற்போது தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளார் என இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பெண், நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது. 

இரண்டு சிறுமிகளும் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தனது இலங்கைக் கணவருடன் இத்தாலி நோக்கிச் சென்றிருந்த வேளையில் குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து, தனது இரண்டு பிள்ளைகளுடன் இத்தாலிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4