பொருளாதார நெருக்கடியால் அம்மா எடுத்த விபரீத முடிவு

#Badulla
Prathees
4 years ago
பொருளாதார நெருக்கடியால் அம்மா எடுத்த விபரீத முடிவு

ஹாலிஎல- வேவல்ஹின்ன தோட்டத்தை சேர்ந்த தாயொருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த சோக சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

35 வயது தாயே தனது 6, 4 மற்றும் 3 வயது குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து தானும் விஷமருந்திய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நால்வரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

தனது கணவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வாழ்வதில் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவை  எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதேசவாசிகளின் தலையீட்டினால் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அனைவரையும் வைத்தியர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4