இலங்கையில் இன்றைய கொவிட் பாதிப்பு

#Covid 19 #SriLanka
Prasu
4 years ago
இலங்கையில் இன்றைய கொவிட் பாதிப்பு

நாட்டில் மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, இன்று இதுவரை 559 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 538,320 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 373 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 504,376 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,674 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட எவரும் உயிரிழக்கவில்லை எனவும், 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 8 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 12 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 5 ஆண்களும் 3 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 6 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4