நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

Prabha Praneetha
4 years ago
நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ. க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக  அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு, சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு  அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4