நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளது ராஜபக்ச அரசு! - மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு

#SriLanka
Prasu
4 years ago
நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளது ராஜபக்ச அரசு! - மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு


"ராஜபக்ச அரசானது, நாட்டு மக்களைப் படுகுழிக்குள் தள்ளியுள்ளதுடன் வரிசையில் நிற்கும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது."

- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"இந்த அரசின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் சீர்குலைந்துள்ளன.

விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்றுமதி முற்றுமுழுதாக அழிந்துள்ளது.

சோமாலியா போன்று எமது நாட்டையும் மாற்றியுள்ள இந்த அரசு, தற்போது விவசாயிகள் விவசாயச் செய்கையை மேற்கொள்ள முடியாதளவு நாட்டை நாசமாக்கியுள்ளது" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4