சுவரை பெயர்த்து சாப்பிடும் வினோத பெண்:3.2 சதுர அடி சுவரை ருசித்தார்

Keerthi
4 years ago
சுவரை பெயர்த்து சாப்பிடும் வினோத பெண்:3.2 சதுர அடி சுவரை ருசித்தார்

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் நிக்கோலே, இவருக்கு சிறு வயதில் சாக்பீஸ்,பல்பம் போன்ற பொருட்களை  சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் வளர்ந்து தற்போது அவர் வீட்டின் சுவர்களையே பெயர்த்து சாப்பிட்டு வருகிறார். இவருக்கு இந்த பழக்கம் ஒரு டிவி நிகழ்ச்சி மூலம் வெளியே தெரியவந்துள்ளது.

அவருக்கு அந்த சுவரின்  மணம் மிகவும் என்பதால் இவர் தன் வீட்டில் உள்ள சுவரை அவ்வப்போது எடுத்து சாப்பிடுகிறார். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 3 சதுரடி சுவரையாவது சாப்பிட்டுவிடுவாராம். தற்போது இந்த சுவரை சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகவே மாறிவிட்டாராம். சில நேரங்களில் வேறு வீட்டிற்கு சென்றாலும் அங்குள்ள சுவரை சாப்பிடும் பழக்கம் இருவருக்கு இருக்கிறதாம்.

இந்த பழக்கம் முதலில் இவரது தாயார் இறந்த போது துக்கத்தில் இருந்ததால் துவங்கிய தாம் தற்போது அதைவிட முடியாமல் தவித்து வருகிறார். 5 ஆண்டுகளாக இப்படி சுவரை சாப்பிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுவரை பெயர்த்து சாப்பிடும் வினோத பழக்கம் கொண்ட நிக்கோல் என்ற பெண் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என டாக்டர் எச்சரித்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

காய்ந்த சுண்ணாம்பின் மணம் மிகவும் என்பதால் ஒரு வாரத்திலேயே 3.2 சதுர அடி சுவரை சாப்பிட்டு விடுவதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4