கடலட்டை பிடிக்கும் மீனவர் மூவர் கைது

#Arrest
Prasu
4 years ago
கடலட்டை பிடிக்கும் மீனவர் மூவர் கைது

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் அனுமதி இன்றி இரவு நேர கடல் அட்டை பிடிக்கும் தொழிலை மேற்கொண்ட 3 மீனவர் இன்றைய தினம் (28) காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுளனர்.

நேற்று (27) இரவு குறித்த 3 மீனவர்களும் படகு ஒன்றில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று அட்டை பிடித்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 மீனவர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட, 453 கடல் அட்டைகள், படகு இயந்திரம், அட்டை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் கண்ணாடி, சப்பாத்து என்பன மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று வியாழக்கிழமை காலை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

குறித்த 3 மீனவர்களிடம் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு அமைவாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் மூவரும் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 453 கடல் அட்டைகள் பகிரங்க ஏலத்தில் விடப்பட்டது.

கடல் அட்டை தொழில் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை மட்டுமே கடற்பரப்பில் அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கடல் அட்டைகளின் உள்ளூர் சந்தை மதிப்பு ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4