10 லட்சம் மதிப்பிலான சொத்துகளை நாசம் செய்த போராட்டம்

#Prison #Welikada
Prathees
4 years ago
10 லட்சம் மதிப்பிலான சொத்துகளை நாசம் செய்த போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் காரணமாக அதன் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் தேவாலயப் பிரிவின் மேற்கூரையில் ஏறி போராட்டம் நடத்தப்பட்டது.

சுமார் 54 கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சிறை அதிகாரிகள் அவர்களை நேற்றிரவு கீழே இறக்கினர்.

இந்த போராட்டம் காரணமாக 10 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4