ஜனாதிபதியைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

#Gotabaya Rajapaksa #America
Prathees
4 years ago
ஜனாதிபதியைச் சந்தித்தார்  அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை  சந்தித்தார்.

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள அவர், நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது,  அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக அலெய்னா அம்மையார் வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு  ஜனாதிபதி பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றல், மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

தனது சேவையைச் சிறப்பாக முன்னெடுக்க இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்காக, ஜனாதிபதி அவர்களுக்கு அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் அலெய்னா அம்மையார் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, இலங்கைக்கான அமெரிக்காவின் பிரதித் தூதுவர் மார்டின் கெலி, அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசான் வல்கே (Susan Walke) ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4