தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி டிப்பர் மோதி பலி

#Accident #Death
Prathees
4 years ago
தாயுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமி டிப்பர் மோதி பலி

மோட்டார் சைக்கிளின் பின்னால் தாயாருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த சிறுமி டிப்பர் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தலஹிட்டியகொட பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் கடந்த 27ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் உயிரிழந்தவர் சமகி மாவத்தை, தலஹிட்டியகொட, இரத்மலை பிரதேசத்தைச் சேர்ந்த தினெலி திஹன்சா சுபசிங்கஆராச்சி என்ற சிறுமி  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மணல் அள்ளிய டிப்பர் வாகனத்தில் மோதியதில் சிறுமி வீதியில் விழுந்து வீதியில் விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் விபத்துக்குள்ளான சிறுமியையும் 36 வயதுடைய தாயையும் அதே  டிப்பர் வாகனத்தில் ஏற்றி டிக்வெல்ல அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4