வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

Prabha Praneetha
4 years ago
வங்கிகளில் கடன் பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல்

இலங்கையில் கடன் வசதிகளை கோரும் மக்களுக்கு இலகுவான முறையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வங்கியல்லாத நிதி நிறுவனங்களிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களுக்கு நிதிக் கடன் வசதிகளை வழங்குவதில் இலங்கை கடன் தகவல் பணியகத்தின் CRIB பதிவுகளைப் பயன்படுத்த வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடன் வழங்காமல் இருப்பதற்கு CRIB பதிவுகளை காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக நிதி நெருக்கடியில் உள்ள மக்கள் வாங்கிய கடன்களில் சில தவறுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

ஏற்கனவே அரச மற்றும் தனியார் வங்கிகளிடமும் இந்தக் கோரிக்கையை இலங்கை மத்திய வங்கி விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4