பிக் பாஸ் வீட்டில் கோபம் முகமாகவே சுற்றும் தாமரைக்கு, ராஜூ அறிவுரை

Prabha Praneetha
4 years ago
பிக் பாஸ் வீட்டில் கோபம் முகமாகவே சுற்றும் தாமரைக்கு, ராஜூ அறிவுரை

பட்டிக்காடா பட்டணமா என்ற டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் வரும் எல்லா ப்ரோமோவிலும் தாமரைச்செல்வி மட்டுமே இடம்பெறுகிறார். இன்றைக்கான புரோமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதில் சில நாட்களாக பிக் பாஸ் வீட்டில் கோபம் முகமாகவே சுற்றும் தாமரைக்கு, ராஜூ அறிவுரை கூறுகிறார்.

அதில், நீ ரொம்ப பேசுற ஒரு அளவுக்குத்தான் பொருத்துக்க முடியும். அதுக்கு மேல போச்சுனா ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கிறார்.

ஸ்ருதியுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தாமரை பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன் கதவ திறங்க என்று அடிக்கடி கூறுகிறார்.

அதை சுட்டிக்காட்டிய ராஜு கதவை திறந்து விட்டால் வெளியே போய் என்ன பண்ணுவ என்று கேட்கிறார்.

அதற்கு தாமரை மீண்டும் நாடகத்திற்கு போவேன் என்று சொல்கிறார். உடனே ராஜு ரொம்ப எதார்த்தமா இருக்கிறதா நெனப்பா என்றும், இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.

ஆனால் நீ அடிக்கடி கத்துவதை பார்த்தால் எல்லோருக்கும் உன் மேல் வெறுப்பு வரும் என்கிறார்.

அத்துடன் வெளியில் பார்க்கும் மக்களுக்கு நீ சரியாக நடந்தாலும் தப்பாகவே தெரியும் என்று அறிவுரை கூறுகிறார்.

ராஜுவின் இந்த பேச்சு மிகவும் சரியானது. தன்னை வெகுளியாக காட்டிக்கொண்டு தாமரை செய்யும் சில விஷயங்கள் சற்று ஓவராக தெரிகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4