WCT20 2021 - மேற்கிந்தியதீவுகளுடனான போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வி

Prasu
4 years ago
WCT20 2021 - மேற்கிந்தியதீவுகளுடனான போட்டியில் பங்களாதேஷ் அணி தோல்வி

ரி20 உலகக்கிண்ணத் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்ளைப் பெற்றது.

அவ்வணி சார்பில் நிகொலஸ் பூரன் 40 ஓட்டங்களையும் ரோஸ்டன் சேஸ் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில்மஹேதி ஹசன், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஷோரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

அதன்படி, 143 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் லிடன் தாஸ் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அணித்தலைவர் மொஹமதுல்லாஹ் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4