பைக் டாக்சியில் பயணித்த ராகுல் காந்தி

Prasu
4 years ago
பைக் டாக்சியில் பயணித்த ராகுல் காந்தி

கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 

கோவாவில் ஆட்சியைப் பிடிக்க மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி உள்ளது. அங்கு மம்தா பானர்ஜி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்நிலையில், கோவாவில் தேர்தல் பணிகள் தொடங்கியபிறகு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று பாம்போலிம் பகுதியில் இருந்து பனாஜியில் உள்ள ஆசாத் மைதானத்திற்கு பைக் டாக்சியில் (பைலட்) பயணம் மேற்கொண்டார். ஹெல்மெட் அணிந்தபடி ராகுல் காந்தி பைக்கில் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4