மின்சாரக் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு காமினி லொக்குகே எச்சரிக்கை!! நாளாந்தம் வருமானம் பெறும் மக்களின் நிலைமை ??

Prabha Praneetha
4 years ago
மின்சாரக்  கட்டணம் செலுத்தாதவர்களுக்கு காமினி லொக்குகே எச்சரிக்கை!! நாளாந்தம் வருமானம் பெறும் மக்களின் நிலைமை ??

"பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்குச் சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும், தொடர்ந்தும் கட்டணத்தைச் செலுத்தாதவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்துவதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது."

- இவ்வாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொரோனாத் தொற்று நோயால் ஏற்படும் வருவாய் இழப்பைக் கருத்தில்கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு சில நிவாரணங்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால், மாதாந்தக் கட்டணத்தைச்  செலுத்தக்கூடியவர்கள் கூட அதைத் தொடர்ந்து செலுத்தவில்லை.

கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மின்கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.

தொடர்ந்து மின்கட்டணம் செலுத்தாதவர்கள், செலுத்தத் தயக்கம் காட்டினால் தற்காலிகமாக மின் இணைப்பைத்  துண்டிக்க வேண்டும்.

எப்படியிருப்பினும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு முன்னர் சிவப்புப் பட்டியல் வழங்கப்படும்" - என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4