பெண்ணொருவரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது

#Murder #Arrest #Police
Prathees
4 years ago
பெண்ணொருவரைக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது

களுத்துறை மாவட்டத்தில் அங்குருவாதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் 36 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

நேற்று (30) இரவு வீட்டிற்கு வந்த சந்தேகநபர் மனைவியின் தாய் மற்றும் தந்தையை தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த 58 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

களுஹேனஇ கல்பத்த பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கல்பத்த பிரதேசத்தில் உள்ள பாழடைந்த இரண்டு மாடி வீடொன்றில் பதுங்கியிருந்த போது இன்று (31) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களுக்கிடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸில் முறைப்பாடு அளித்ததே கொலைக்கான காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4