பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சி : அரசியலில் வலம் வரும் கறுப்பாடுகள்!!

Prabha Praneetha
4 years ago
பொருளாதார நெருக்கடியை உருவாக்க சிலர் முயற்சி : அரசியலில் வலம் வரும் கறுப்பாடுகள்!!

அரசாங்கத்தில் இருக்கும் ஒருசில தரப்பினர் நாட்டிற்குள் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அரசங்கதிக்குள்ளேயே இருந்துகொண்டு எதிர்ப்பை வெளியிடும் நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான தீர்மானங்கள் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியினர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருந்தால் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என குறிப்பிட்ட அவர், அமைச்சர்கள் மற்றும் அரசதரப்பு உறுப்பினர்கள் இவ்வாறு நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என கூறினார்.

மேலும் அரசாங்கத்தில் பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம் என்ன வெற்றியை அடைய முடியும் என செஹான் சேமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான விசேட சந்திப்பில் இந்த பிரச்சினைகள் குறித்து எவரும் கவலை தெரிவிக்கவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4