சுகாதார தொண்டர்கள் எதற்காக வடமாகாண ஆளுநர் செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்?

Reha
4 years ago
சுகாதார தொண்டர்கள் எதற்காக வடமாகாண ஆளுநர் செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்?

சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்திருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 970 பேரில் சுரேன் ராகவன் வடக்கு ஆளுநராக இருந்த போது  எடுத்த முயற்சியின் பயனாக 349 பேருக்கு அவர்களது சேவை கால அடிப்படையில் அரச நியமனத்துக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அதில் ஏனையோரிற்கு நியமனம் வழங்கப்படாத நிலையில், தமக்கும் குறித்த நியமனத்தை வழங்குமாறு கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தாங்களும் நீண்ட காலமாக தொண்டு அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களாக கடமையாற்றியிருக்கிறோம் மொத்தமாக 970 பேர் வடக்கு மாகாணத்தில் உள்ளோம் ஆனால் 349 பேருக்கு மாத்திரமே நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டு தற்போது அவர்களுக்குரிய நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனினும்  வடக்கு மாகாணத்தில் உள்ள 970 சுகாதாரத் தொண்டர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு தற்போது வடக்கு மாகாணத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியே இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4