கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் பிரதமர் மோடி வழிபாடு

கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் பிரதமர் மோடி வழிபாடு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று காலை சென்றார். விமானம் மூலம் டேராடூன் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் குர்மித் சிங், முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி கேதார்நாத் கோவிலுக்குச் சென்றார்.

கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.  அவர், 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை அங்கு திறந்து வைத்தார். 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது இந்த சிலை சேதமடைந்தது.

இப்போது அந்த சிலை புனரமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன் பல திட்டங் களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4