WCT20 2021 - மேற்கிந்தியத்தீவுகள் அணியை பந்தாடிய அவுஸ்திரேலிய அணி

Prasu
4 years ago
WCT20  2021  - மேற்கிந்தியத்தீவுகள் அணியை பந்தாடிய அவுஸ்திரேலிய அணி

டி20 உலக கிண்ண போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அவுஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், பிஞ்ச் களமிறங்கினர். 3 வது ஓவரில் பிஞ்ச் 9 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஸ் ஜோடி சிறப்பாக ஆடி இருவரும் அரை சதம் அடித்தனர். 1 ஓட்டம் எடுத்தால் வெற்றி பெரும் நிலையில் கெய்ல் பந்து வீச்சில் மிட்செல் மார்ஸ் 53 ஓட்டங்களில் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

16.2 ஓவரில் அவுஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் 56 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4