அடிக்கடி மலம் கழிக்கும் குறையை நீக்கும் யோக முத்திரைகள்
அபான முத்திரை: நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். தரையில் அமர முடிபவர்கள் விரிப்பில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடு விரல், மோதிரவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். படத்தை பார்க்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.
பிருதிவி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். விரிப்பில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் மோதிரவிரல் பெருவிரல் நுனியை இணைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் செய்ய வேண்டும். சாப்பிட்டிருந்தால் இரண்டு மணி நேர இடைவெளி வேண்டும்.
சுத்தப்படுத்தும் முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை தேடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் மோதிர விரலின் முதல் பகுதியில் பெருவிரல் நுனியால் தொடவும். படத்தை பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
மாதங்கி முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். எல்லா கை விரல்களையும் கோர்க்கவும். நடுவிரல் மட்டும் சேர்த்து நேராக படத்தில் உள்ளது போல் வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக வைக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம், மாலை இரண்டு நிமிடங்கள் சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
முகுள முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற நான்கு விரல்களையும் குவித்து மேல் நோக்கி படத்தில் உள்ளது போல் இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சாப்பிடுமுன் செய்யவும்.
மணிப்பூரக சக்கரா தியானம்
மேற்குறிப்பிட்ட முத்திரைப் பயிற்சி செய்தவுடன் ஒரு எளிய மணிப்பூரக சக்கரா தியானம் செய்ய வேண்டும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும். உங்களது மூச்சோட்டத்தை கூர்ந்து கவனிக்கவும். நல்ல பிராண காற்று வயிற்று உள் பகுதி முழுவதும் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
வஜ்ராசனம்: விரிப்பில் ஒவ்வொரு காலாக மடித்து படத்தில் உள்ளது போல் வஜ்ராசனம் போடவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடம் நீங்கள் இருக் கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.
மேற்குறிப்பிட்ட பயிற்சிகள் உங்களுக்கு ஒரு யோகச் சிகிச்சையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிக்கையுடன் காலை, மாலை இரு வேளை பயிற்சி செய்யுங்கள்.