பொலிஸார் மீது தாக்குதல்: 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
பொலிஸார் மீது தாக்குதல்: 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது

கஹட்டகஸ்திகிலிய குருக்குரகம பிரதேசத்தில் நேற்று (06) பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் பிரதேச போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 கிராம் ஹெரோயினுடன் 18 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த குழுவொன்று பொலிஸ் அதிகாரிகளை தாக்கி சந்தேக நபரை விடுவிக்க முயற்சித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் உட்பட ஒன்பது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (07) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4