வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற ஆர்வமுள்ளவரா?  இதோ முக்கிய அறிவிப்பு

#SriLanka
Prathees
4 years ago
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற ஆர்வமுள்ளவரா?  இதோ முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்படுத்தும் ஆட்சேர்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்த பண மோசடி இடம்பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தென் கொரியாவில் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி முறையான அமைப்பின் கீழ் பணியகத்தால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

ஜப்பான் மற்றும் இஸ்ரேலில் உள்ள வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மட்டுமே செய்யப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மோசடி நபர்களுக்கு இரையாக வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்  அறிவித்துள்ளது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4