கொழும்பில் பணம் மற்றும் போதைப்பொருளுடன் 8 பேர் கைது

#Arrest #Colombo
Prathees
2 years ago
கொழும்பில் பணம் மற்றும் போதைப்பொருளுடன் 8 பேர் கைது

கெசல்வத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருள் மற்றும் பணத்துடன் 8 சந்தேகநபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெசல்வத்தையில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, 75.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ரூ. 790,000 ரூபாய் பணம் ஆகியவற்றுடன், குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

75.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 3 சந்தேகநபர்களும், 3 கிராம் ஹெரோயின் மற்றும் 6 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் மேலும் 5 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 790,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு 12 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேரையும்,  நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!