WCT20 2021 - பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றி

Prasu
4 years ago
WCT20  2021  - பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றி

ரி 20 உலகக்கிண்ண தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்த்தாடிய பாகிஸ்தான் அணி 72 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சொய்ப் மலிக் 18 பந்துகளில் 54 ஓட்டங்களையும், மொஹமட் ஹாபீஸ் 19 பந்துகளில் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அணித்தலைவர் பாபர் அஸாம் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி நிர்ணயிக்கபபட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4