பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது:-முக்கிய கேள்விகளுக்கு இன்று பதில் !!

Prabha Praneetha
4 years ago
பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது:-முக்கிய கேள்விகளுக்கு இன்று பதில் !!

பாராளுமன்றம் மீண்டும் இன்று கூடுகிறது.

விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

கொரோனா பரவல் காரணமாக பாராளுமன்ற அமர்வு உரிய வகையில் இடம்பெறாமையினால், சபையில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்க முடியாது போனது. இதனால் கேள்விகளுக்கு பதிலளிக்க இன்றைய தினம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அமைச்சரவை அமைச்சர்களுக்காக 50 கேள்விகள் காணப்படுகின்றன.

அரசாங்கத்தின் சார்பில் அதற்குப் பதிலளிப்பதற்காக மாத்திரம் விசேட பாராளுமன்ற அமர்வு இரண்டு தினங்களுக்கு கூட்டப்படவுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4