இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரும் சீனா!

Reha
4 years ago
இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரும் சீனா!

இலங்கையிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி சீனா நிறுவனம் கடிதம் அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்சைக்குரிய சீன சேதனப் பசளை கப்பலின் ஏற்றுமதியாளர்களான சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளரிடமே சீன நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரியுள்ளது. குறித்த சீன நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்காக இந்த நட்டஈட்டை கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பக்டீரியா உள்ளடங்குவதாக உறுதி செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட சீன சேதன உரத் தொகையை எடுத்து வந்த "HIPPO SPIRIT" என்ற கப்பல் தற்போது களுத்துறை - பேருவளை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4