மரக்கறி தட்டுப்பாடு - மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும் அபாயம்!

Reha
4 years ago
மரக்கறி தட்டுப்பாடு - மக்கள் வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும் அபாயம்!

பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும்  மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது 60 வீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளின் தொகையானது எதிர்வரும் நாட்களில் குறைந்தால், தட்டுப்பாடு ஏற்பட்டு, மரக்கறிகளை கொள்வனவு செய்யவும் மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தைக்கு கிடைக்கும்  மரக்கறிகளின் தொகை குறைந்துள்ளதால், அவற்றின் மொத்த விற்பனை விலைகளும் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபசேன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4