கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு முறியடிப்பு!(Photos)

Reha
4 years ago
கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு முறியடிப்பு!(Photos)

யாழ்.தீவகம் வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தனியாருக்கு சொந்தமான அல்லைப்பிட்டியில் 7 பரப்பு காணியும் மண்கும்பானில் 8 பரப்பு காணியும் புங்குடுதீவு வல்லன் பகுதியில் 14 ஏக்கர் காணியுமாக ஒரே நாளில் மொத்தமாக மூன்று இடங்களில் உள்ள தனியாருக்கு தொந்தமான குடிமனை மற்றும் தோட்ட நிலங்களை இலங்கை கடற் படையினருக்கு நிரந்தரமாக முகாம் அமைப்பதற்கு அளந்து சுவீகரிக்க யாழ் நில அளவை திணைக்களம் எடுத்துக்கொண்ட முயற்சி பொதுமக்களினால்  முறியடிக்கப்பட்டது.

இன்றைய எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் எம்முடன் காணி உரிமையாளர்களும் தமிழ்த் தேசிய செயற்ப்பாட்டாளர்களும் இணைந்து போராடினர். எதிர்ப்பை வெளிப்படுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலீசாரும் கடற்படையினரும் புலனாய்வாளர்களும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4