அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தற்போதைக்கு கைது செய்யப்பட மாட்டார்: சட்டமா அதிபர்

#Court Order #Colombo
Prathees
4 years ago
அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தற்போதைக்கு கைது செய்யப்பட மாட்டார்: சட்டமா அதிபர்

மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி செய்த முறைப்பாடு தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தற்போதைக்கு கைது செய்யப்பட மாட்டார் என  சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இதனைத் தெரிவித்தார்

அருட்தந்தை  சிறில் காமினி பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரை தற்போதைக்கு கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என உச்ச நீதிமன்றில் சமர்பித்ததோடுஇ குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணை முடிவடைந்த பின்னர் சட்டமா அதிபர் உரிய முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்செகுலரத்ன, வாக்குமூலமொன்றை வழங்குவதற்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளுக்கு உதவுவதற்கும் தமது கட்சித் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றில் அறிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4