மூன்று விபத்துக்களில் மூவர் பரிதாப மரணம்!

#Accident #Death
Prathees
4 years ago
மூன்று விபத்துக்களில் மூவர் பரிதாப மரணம்!

மூன்று விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

அதற்கமைய குருநாகல், தம்புள்ளை வீதி - மெல்சிறிபுர நகரில், தனியார் பஸ்ஸொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பாதசாரி மரணமடைந்துள்ளார்.

பல்லேவத்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர், குருநாகல் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் மரணமடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாத்தளை, தம்புள்ளை பொலிஸ் பிரிவுகுட்பட்ட மாரிஆராவ வீதி, கிரிவெல்கொட பிரதேசத்தில் கப்ரக வாகனமொன்று எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர், தம்பகல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துள்ளார்.

மாரிஆராவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது நபரே மரணமடைந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கப் ராக வாகனத்தின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம், தம்புத்தேகம வீதி, ஹூரிகஸ்வௌ சந்தியில் டிரக்டர் வாகனமொன்று எதிரே வந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர், அநுராதபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்துள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயது இளைஞரே மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய டிரக்டர் வாகனத்தின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4