இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி!

Keerthi
4 years ago
இரு வேறு விபத்துக்களில் இருவர் பலி!

இரு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

இதற்கமைவாக புத்தளம் - சிலாபம் வீதி, நல்லதரன்கட்டுவ பிரதேசத்தில் வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் சிலாபம் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளார்.

சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பதுளை, ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிபிலை பேதியாகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் பிபிலை வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளார்.

திரியகம, யல்வல பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4