கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு

#Student #School
Prathees
4 years ago
கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு

தரம் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொவிட் பரவல் காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் 10, 11, 12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீரற்ற வானிலையையும் பொருட்படுத்தாமல், கணிசமான மேல் வகுப்பு மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்கள் குழுக்களாகவே பாடசாலைக்கு அழைக்கப்படுகின்றார்கள். அதன்படிஇ ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை 20 க்கு மேல் இருந்தால், அந்த மாணவர்களை 2 குழுக்களாக பாடசாலைக்கு அழைக்க வேண்டும். 

ஒரு வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை 40 க்கு மேல் இருந்தால், அவர்களை 3 குழுக்களாக பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4