வௌ்ள நிலமை தொடர்பான தற்போதைய நிலை

Prabha Praneetha
4 years ago
வௌ்ள நிலமை தொடர்பான தற்போதைய நிலை

அதிக மழைவீழ்ச்சி காரணமாக பல்வேறு ஆறுகள் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களனி கங்கையின் தாழ்வுப்பகுதியில் உள்ள ஆறுகளின் நீர்மட்ட அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் தெஹியேவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்போ, கடுவல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தள பிரதேச சபைக்கு உட்பட்ட தாழ்வு பகுதிகளில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் வரதகொல்ல, நாஉல்ல, திவுல்தெனிய மற்றும் வெலிஹித கிராம சேவைக்கு உட்பட்ட பகுதி மற்றும் அளவ்வ, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளின் தாழ்வு நிலப்பகுதியில் உள்ளவர்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சீத்தாவக கங்கையும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4