மன்னார் மாவட்டத்தில் 12,350 பேர் வெள்ளத்தால் பாதிப்பு

Prabha Praneetha
4 years ago
மன்னார் மாவட்டத்தில் 12,350 பேர் வெள்ளத்தால் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் காரணமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,501 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் தற்போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தலைமன்னார் ,பேசாலை, தாள்வுபாடு, மன்னார் சாந்திபுரம், சௌத்பார், ஜிம்ரோன் நகர் உள்ளிட்ட மன்னார் நகர் பகுதியில் உள்ள பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மடுக்கரை உள்ளிட்ட சில கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விடத்தல் தீவு, தேவன் பிட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாய நிலங்களில் மழை வெள்ள நீர் சூழ்ந்து கொண்டு உள்ளமையினால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் அமைந்துள்ள மீன் வாடிகள் சேதமாகி உள்ளதோடு, படகுகள் சேதமடைந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4