மலையகத்திலும் ஆசிரியர்கள் போராட்டத்தில்

Prabha Praneetha
4 years ago
மலையகத்திலும் ஆசிரியர்கள் போராட்டத்தில்

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாட்டிற்கான உரிய தீர்வை பெற்று தருமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று ஹட்டனில் இடம்பெற்றது.

தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அதிபர் ஆசிரியர் ஒன்றினைந்த சங்கத்தினால் இன்று (09) பிற்பகல் 03 மணிக்கு ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணிக்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுட்டனர்.

மல்லியப்பு சந்தியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி பிரதான வீதியூடாக ஹட்டன் மணிக்கூண்டு வழியாக பிரதான பஸ்தரிப்பிடம் வரை வந்து ஆர்ப்பாட்டதை முன்னெடுத்தனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நீண்ட கால கோரிக்கையான அதிபர் ஆசிரியர்களின் கொடுப்பனவை வழங்கக்கோரியும் கல்வித்துறையிலுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரக் கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பியதுடன் பதாதைகள் ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4