ஓய்வூதியர்களுக்கான காப்புறுதி திட்டம் இரத்து

#SriLanka
Prathees
4 years ago
ஓய்வூதியர்களுக்கான காப்புறுதி திட்டம் இரத்து

ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் ´அக்ரஹார´ காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டம் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் சம்பளத்திலிருந்து அக்ரஹார காப்புறுதித் திட்டத்துக்கான பணத்தை மீளப்பெறுமாறு அரச நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இன்று (09) புதிய சுற்றறிக்கையை விடுத்து இதனை தெரிவித்துள்ளார்.

29.10.2021 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை 12/2005 (VIII) இன் விதிகளை நடைமுறைப்படுத்துவது, எழுந்த பல்வேறு ஆட்சேபனைகளைப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மேற்கொண்டு விவாதித்து உரிய முடிவு எடுக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோரின் சம்பளத்தில் இருந்து ரூ.600ம், 70 வயதுக்குட்பட்ட ஓய்வூதியதாரரின் சம்பளத்தில் ரூ.400ம் வசூலிக்க முன்மொழியப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4