சூட்கேஸில் சடலம் : பிரதான சந்தேகநபர் சிக்கினார்

#Arrest #Police
Prathees
4 years ago
சூட்கேஸில் சடலம் : பிரதான சந்தேகநபர் சிக்கினார்

சப்புகஸ்கந்த மாபிம வீதியில் குப்பைத்தொட்டியிலிருந்து சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்  தொடர்பில், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் வெல்லம்பிட்டியவில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாளிகாவத்தையைச் ​சேர்ந்த 44 வயதான பாத்திமா மும்தாஜின்  என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்.

படுகொலைச் செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள், வைத்திருந்த பணம், ப​டுகொலைச் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உலக்கை, சடலத்தை எடுத்துச் சென்ற முச்சக்கரவண்டி உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளன சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கணவன்-மனைவி ஜோடியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், அவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரமே பிரதான சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பெண் அணிந்திருந்த நகைகளில் தங்க சங்கிலி, இரண்டு தோடுகள், தங்க மோதிரம் சந்தேகநபரான பெண்ணினால், கொழும்பு-11, செட்டித்தெருவிலுள்ள தங்க நகைக்கடையில்  1 இலட்சத்து 69 ஆயிரத்துக்கு விற்றப்பட்டுள்ளது. அந்த நகைகள் யாவும் உருக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயேஇ இவை கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4