கதிர்காமம்  ஆலயத்தில் 5 கோடி ருபாய் பெறுமதியான மாணிக்கம் மாயம்

#Police
Prathees
4 years ago
கதிர்காமம்  ஆலயத்தில் 5 கோடி ருபாய் பெறுமதியான மாணிக்கம் மாயம்

இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள இரத்தினக்கல் வியாபாரி ஒருவரால் கதிர்காமம் தேவாலயத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மாணிக்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கதிர்காமம் தேவாலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 38 பவுண் தங்க தகடு காணாமல் போனமை தொடர்பில் அங்கொட அதிபர் அகம்பொடிகே நிசசங்கலவின் மனைவியிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அங்கொட முதலாளியின் மகனின் தோஷத்தை போக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி கதிர்காமம் தேவாலயத்திற்கு தங்க தகடு காணிக்கையாக செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4