மண்மேடு சரிந்து விழுந்ததில் 23 வயது யுவதி பலி

#Death
Prathees
4 years ago
மண்மேடு சரிந்து விழுந்ததில் 23 வயது யுவதி பலி

நாரம்மல வென்னொருவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் 23 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட போது தாய்இ மகள் மற்றும் மகன் வீட்டினுள் இருந்துள்ளனர்.

மண்சரிவில் காயமடைந்த மகள் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கணினி தரவு இயக்குநராக கடமையாற்றிய சந்துனி ஜயசூரிய வயது 23 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் தாய் மற்றும் சகோதரருக்கு காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4