வாகன சாரதிகளுக்கான விஷேட அறிவிப்பு

#SriLanka
Keerthi
4 years ago
வாகன சாரதிகளுக்கான விஷேட  அறிவிப்பு

வாகன தண்டப்பணம் செலுத்துவதற்காக பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிவாரணக் காலம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதன்படி, 2021.10.31 ஆம் திகதியில் இருந்து செய்யும் குற்றங்கள் தொடர்பிலான வாகன அபராத பற்றுச்சீட்டிற்கு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை மேலதிக தண்டப்பணம் அறவிடப்படாது எனவும், அதன்பின் 28 நாட்கள் வரையிலான வாகன அபராத பற்றுச்சீட்டிற்கு மேலதிக தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அதேபோல், நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து செய்யும் குற்றங்கள் தொடர்பிலான வாகன அபராத பற்றுச்சீட்டு வழமைப் போல 14 நாட்கள் கணக்கிடப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படும் எனவும், 28 நாட்கள் வரையிலான வாகன அபராத பற்றுச்சீட்டிற்கு மேலதிக தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் மற்றும் 28 நாட்களை கடந்த வாகன அபராத பற்றுச்சீட்டு ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4